சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி ஏ14 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் நீடித்த பேட்டரி லைஃப் மற்றும் ஹை-ரெஸலூஷனில் வெளிவந்துள்ளது. மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் ஏ சீரிஸ் வரிசையில் ஏ14 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.6 இன்ச் ஃபுள் ஹெச்.டி+ ஸ்க்ரீன்
- Exynos 850 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 50+5+2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 4ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.13,999
- 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.14,999
- விலையில் 1,000 ரூபாய் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பாக்ஸில் சார்ஜர் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
Samsung Galaxy A14 Unboxing, Spec and Price #SamsungGalaxyA14 pic.twitter.com/VHlQlmOSuR
— Valor Reviews (@valorreviews) March 10, 2023