முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவின் கார் ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை அமைந்தகரை பகுதியில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தை சுற்றி துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது.
விசாரணையில் அது முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவின் கார் ஓட்டுநர் அப்துல் முகமது (43) என்று தெரியவந்தது. இதுகுறித்து பி.வி.ரமணாவிடம் விசாரித்தபோது, ஓட்டுநர் 45 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்ததாக கூறியுள்ளார்.
இந்த அலுவலகத்தில்தான் ஓட்டுநர்கள் தங்குவார்கள் என்றும் கூறியுள்ளார். அப்துல் முகமதுவுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருக்கிற காரணத்தினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது
அலுவலகத்தில் தங்கி இருக்கும் போது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா, தற்கொலையா அல்லது கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in