ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ம.தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் ஜூன் மாதம் 14-ம் தேதி சென்னை அண்ணா நகர், 3-வது அவென்யூ, புதிய ஆவடி சாலை சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் கழக பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும். இதனை முன்னிட்டு ஜூன் 1-ம் தேதி வேட்புமனு பெறும் நிகழ்ச்சி சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற இருக்கிறது.
வருகிற 27-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அமைப்பு செயலாளர் இரா.பிரியகுமார் (98402 17200) மற்றும் கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் (94430 49151) ஆகியோரிடம் உரிய கட்டணத்தை செலுத்தி வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.