கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம், 20ம் திகதி பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி வைபவ ரீதியாக பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, நீர் அமைப்பையும் திறந்து வைத்தார்.
இந்த திட்டத்திற்காக இலங்கை அரசு ரூபா 3,847 மில்லியன் நிதியை வழங்கியுள்ளதுடன், நெதர்லாந்து அரசு 81.95 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்கியுள்ளது. இதன்மூலம் 52,300 குடும்பங்களை சேர்ந்த 169,000 மக்கள் குடிநீர் வசதிகளை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.