பிரசத்தி பெற்ற அல்ட்ராஸ் காரில் சிஎன்ஜி கொண்ட மாடல் விற்பனைக்கு ₹ 7.55 லட்சத்தில் முதல் ₹ 10.55 லட்சம் வரை விலையை டாடா மோட்டார்ஸ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேரியண்ட், உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் என அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.
1.2 லிட்டர் பெட்ரோல் மாடலில் CNG எரிபொருள் பெற்ற வேரியண்ட் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் சிஎன்ஜி எரிபொருள் மைலேஜ் 27Km/kg ஆகும்.
Tata Altroz iCNG
1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் சிஎன்ஜி எரிபொருள் மைலேஜ் 27Km/kg ஆகும்.
இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம் கொண்ட 60 லிட்டர் (ஒவ்வொரு சிலிண்டருக்கும் 30லி) மொத்த சிஎன்ஜி கொள்ளளவை கொண்டுள்ளது. மேலும் இந்த சிலிண்டர் பெரிய பூட் இடத்தை உறுதி செய்வதற்காக லக்கேஜ் பகுதிக்கு கீழே உள்ளது.
மொத்தமாக 6 வேரியண்டுகளை பெறுகின்ற அல்ட்ராஸ் காரில் XE, XM+, XM+ (S), XZ, XZ+ (S) மற்றும் XZ+ O (S). வாய்ஸ் அசிஸ்ட் மற்றும் சன்ரூஃப் வசதிகளை XM+ (S), XZ+ (S) மற்றும் XZ+ O (S) வேரியண்டுகள் பெறுகின்றது.
டாப் வேரியண்டில் 7.0-இன்ச் தொடுதிரை, டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன், சன்ரூஃப், 16-இன்ச் அலாய் வீல். , இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு, உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, லெதரெட் இருக்கை, பின்புற ஏசி வென்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
TATA ALTROZ iCNG PRICE LIST | |
Variant | Price |
XE | Rs. 7.55 lakh |
XM+ | Rs. 8.40 lakh |
XM+ (S) | Rs. 8.85 lakh |
XZ+ | Rs. 9.53 lakh |
XZ+ (S) | Rs. 10.03 lakh |
XZ+O (S) | Rs. 10.55 lakh |