வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போர்ட் மோரஸ்பி: தெற்கு உலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமைக்கு பின்னால் நாங்கள் அணி திரள்வோம் என பபுவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, தன் ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு, நேற்று இரவு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். . அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரோப், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கி வரவேற்றார். பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.
போர்ட் மோரஸ்பி நகரில் இன்று(திங்கள் கிழமை) நடைபெற்ற இந்தியா – பசுபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பேசிய ஜேம்ஸ் மராபி பே சியதாவது; தெற்கு உலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமைக்கு பின்னால் நாங்கள் அணி திரள்வோம். ஜி20, ஜி7 போன்ற சர்வதேச அமைப்புகளில் சிறிய நாடுகளுக்கான வலிமையான குரலாக இந்தியா ஒலிக்க வேண்டும்.
பசிபிக் தீவு நாடுகள் சிறியதாகவும், எண்ணிக்கையில் குறைந்ததாக இருக்கலாம். ஆனால், பசிபிக் பிராந்தியத்தில் நாங்கள் பெரிய நாடுகள். வர்த்தகம், சுற்றுலா போன்றவற்றுக்காக உலகம் எங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.
சிறிய பொருளாதார நாடான நாங்கள், அதிக விலை கொடுத்து எரிபொருளையும், மின்சாரத்தையும் பெறும் நிலையில் உள்ளோம். தெற்கு உலகின் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறீர்கள். சர்வதேச விவகாரங்களில் உங்கள் தலைமையை ஏற்று நாங்கள் பின்தொடருவோம்.
பசிபிக் நாடுகளின் தலைவர்கள் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும். அவர்களோடு பேச வேண்டும். இந்தியா – பசிபிக் நாடுகள் இடையேயான உறவு வலுப்பெறும். பசிபிக் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, தெற்கு உலகின் தலைவரான நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு பப்புவா நியூ கினியா பிரதமர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement