கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழைநாட்டிற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் பருவமழையாக தென்மேற்கு பருவமழை பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். வழக்கமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் கேராளவில் தொடங்கும். பின்னர் கர்நாடகா, மும்பை, கோவா, கொல்கத்தா என படிப்படியாக பெய்ய தொடங்கும்.
Andrea: பளபளக்கும் டைட் பார்ட்டி வியரில் நடிகை ஆண்ட்ரியா… ஹாட் க்ளிக்ஸ்!
நெருங்கும் பருவகாலம்இந்த தென்மேற்கு பருவமழையால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பயன் பெற்று வருகின்றன. தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் இருந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பெய்யாத பகுதிகள் கூட இந்த மழையால் ஆறுகள் மூலம் பயன் பெற்று வருகின்றன. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் நெருங்கி விட்டதால், அதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பயணிகளிடம் ரூ. 2000 நோட்டு பெறக்கூடாதா? அரசு போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு!
வெளுத்து வாங்கும்இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கேரளாவில் பருவமழைக்கு முந்தைய சில ஆரம்ப மழைகள் இருந்தபோதிலும், மாநிலத்தின் பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை காணப்படுகிறது. இருப்பினும், இம்முறை கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் பின்னர் சூடுபிடித்து பிரம்மாண்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
Tirupati: வார இறுதி நாளில் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்.. 4 கிமீ தொலைவுக்கு நின்ற பக்தர்கள்!
அதிக வெப்பநிலைநாடு முழுவதுமே இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. இதனாலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாகவும் கேரளாவில் பருவமழையின் முதல் இரண்டு மாதங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலப்பரப்பில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பது பருவமழையை வலுப்படுத்த வாய்ப்பாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Esther Anil: படு மாடர்னாக மாறிய பாபநாசம் பட பாப்பா… மிரட்டல் போட்டோஸ்!
மழை அதிகரிக்கும்மேலும், இது நிலப்பரப்பில் குறைந்த அழுத்தங்களை உருவாக வழிவகுக்கும் என்றும் இதனால் இது இந்தியப் பெருங்கடலில் இருந்து நிலத்திற்கு அதிக ஈரப்பதம் நிறைந்த காற்றை இழுக்க வாய்ப்புள்ளதால் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் எல் நினோ இந்த ஆண்டு பசுபிக் பெருங்கடல் பகுதியில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Poorna: அச்சோ… செம்ம க்யூட்… பூர்ணா மகன பாத்தீங்களா… கலக்கல் போட்டோஸ்!