அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பேரூந்து சேவையை இரத்து செய்வதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட கொள்கை தீர்மானத்தின் பிரகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பயணிகள் போக்குவரத்துக்கான அரை சொகுசு பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் 2023.06.30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய அனுமதி பெற்றவர்களின் சம்மதத்துடன் மற்றும் ஒரு சேவைக்காக மாற்றி அமைக்கப்படும் என குறித்த அனுமதி பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரை சொகுசு பயணிகள் சேவை அனுமதிகள் 2023.06.30 ஆம் திகதிக்கு முன்னர் வேறு சேவைக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும், அத்துடன் குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் அரை சொகுசுப் பயணிகள் போக்குவரத்து சேவையை இரத்து செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.