மத்திய பிரதேச தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.
இதன்படி, காங்கிரஸ் வெற்றி பெற்றால் பெண்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய், 500 ரூபாய்க்கு மானிய விலையில் சிலிண்டர், 100 யூனிட் இலவச மின்சாரம், 200 யூனிட் வரை பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது போன்ற பல அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
கர்நாடக தேர்தல் வெற்றியை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் வெற்றி பெறும் முனைப்பில் இந்த அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.