இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சர்வதேச அளவில் தஞ்சம் கோரும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சொந்த நாட்டில் போர், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் வாழ்வாதாரத்திற்காக புதிய நாடுகளை நோக்கி நகர்கின்றனர். அதில் முறைப்படி செல்பவர்களை விட சட்டவிரோதமாக பயணிக்கும் அல்லது உள்நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
அகதிகளின் ஆபத்தான பயணங்கள்
பலரும் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு உயிரை பறிகொடுக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அதில் தங்களது உடைமைகளை பறிகொடுத்து விட்டு செய்வதறியாது தவிப்பர்களும் உண்டு. இப்படியான சம்பவம் தான் கிரீஸ் நாட்டில் சமீபத்தில் நடந்து தஞ்சம் கோரி செல்லும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் ஊடகம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
மோடி காலில் விழுந்த பிரதமர்… பப்பு நியூ கினியாவில் எதிர்பாராத நெகிழ்ச்சி… யார் இந்த ஜேம்ஸ் மராப்?
கிரீஸ் நாட்டில் தஞ்சம்
இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடந்ததாக தெரிகிறது. இனி சம்பவத்தை விரிவாக பார்க்கலாம். கிரீஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துவிட வேண்டும் என்று துருக்கியில் இருந்து சிலர் முடிவு செய்தனர். இவர்கள் சோமாலியா, எரித்திரியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த கைக்குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர். இந்த அகதிகள் கிரீஸ் நாட்டிற்கு சென்றதும், முகமூடி அணிந்த மர்ம நபர்களை சுற்றி வளைக்கப்பட்டனர்.
கடலோர காவல்படை
அகதிகள் அணிந்திருந்த ஹிஜாப்களை கிழித்து எறிந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களிடம் இருந்த பணம், அலைபேசிகளை பறித்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி வேன் ஒன்றில் அகதிகளை சுமார் ஒரு மணி நேரம் அடைத்து வைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அகதிகளை அதிவேக படகில் ஏற்றிக் கொண்டு போய், கிரீஸ் கடலோர காவல்படையின் படகில் இறக்கி விட்டு வந்துள்ளனர்.
தப்பித்த அகதிகள்
பின்னர் கிரீஸ் நாட்டின் கடல் எல்லை வரை அழைத்து சென்று சிறிய படகில் இறக்கி விட்டு திரும்பி வந்துவிட்டனர். இவர்கள் நடுக்கடலில் தவித்த நிலையில் துருக்கி அதிகாரிகள் மீட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட அகதிகள் கூறுகையில், கடலில் தவித்த போது மீண்டும் உயிர் பிழைப்போம் என்று நினைக்கவே இல்லை. கொஞ்சம் கூட ஈவு, இரக்கமின்றி சிறிய படகில் இறக்கி விட்டு சென்றுவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.
அமெரிக்கா: கரண்ட் இல்லாமல் தவித்த 16 ஆயிரம் பேர்.. யார் செஞ்ச வேலை.. அடப்பாவி நீயா.?
நியூயார்க் டைம்ஸ் அதிரடி
இந்நிலையில் அகதிகளை படகில் ஏற்றி அனுப்பும் வீடியோவை நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கிரீஸ் நாட்டின் மீது கண்டனங்கள் குவிந்து வருகின்றன. முகமூடி அணிந்து வந்த நபர்கள் கிரீஸ் நாட்டுடன் தொடர்புடையவர்கள் எனச் சொல்லப்படுகிறது.
எனவே ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ள தஞ்சம் கோருவதற்கான விதிகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான கடமைகளை கிரீஸ் மதித்து நடக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. அகதிகளை கையாண்ட விதம் தொடர்பாக கிரீஸ் நாட்டின் பதிலுக்காக பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை.