ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடக்கும் ஜி 20 குழு கூட்டத்தை சீனா புறக்கணித்தது மட்டுமின்றி சவுதி அரேபியா போன்ற நாடுகளும் புறக்கணித்து உள்ளன. இதற்கு பின் என்ன காரணம் உள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட பின் அங்கு நடக்கும் முதல் சர்வதேச நிகழ்வாகும் இது.
பெரும் பாதுகாப்பிற்கு இடையில் 20 நாட்டு தலைவர்கள் நேற்று தொடங்கிய கூட்டத்தில் கலந்து கொண்டனர். மே 24ம் தேதி வரை இந்த கூட்டம் நடக்க உள்ளது.
தால் ஏரியின் கரையில் உள்ள ஷெரி காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இந்த கூட்டம் நடைபெறும். G20 நாடுகளைச் சேர்ந்த 60 பேர் உட்பட 180க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி 20 நாடுகளின் சுற்றுலா துறை அமைச்சர்கள், அதிகாரிகள், தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த கூட்டத்திற்கு வருவார்கள். இந்த குழுவின் கடைசி சந்திப்பு அடுத்த மாதம் கோவாவில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் அச்சறுத்தல் உள்ள நிலையில் அங்கு நடக்கும் இந்த கூட்டம் அதிகம் கவனிக்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த இரண்டு ஜி 20 சுற்றுலா குழு மீட்டிங்குகளை விட இதில்தான் அதிக உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஒரே நாளில் அதிர்ச்சி:
ஜி 20 நாடுகள் என்பது உலகின் சக்தி வாய்ந்த, வளர்ந்த, வளரும் நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்த கூட்டமைப்புதான் ஜி 20 ஆகும்.
இருந்து ஜம்மு – காஷ்மீரில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் சீனா, துருக்கி, சவூதி, எகிப்து போன்ற நாடுகள் புறக்கணித்து உள்ளனர். ஒரே நாளில் முக்கிய நாடுகள் சேர்ந்து இந்தியாவிற்கு பிரஷர் போட்டுள்ள.
காரணம் என்ன?
ஜம்மு காஷ்மீரில் நடக்கும் ஜி 20 குழு கூட்டத்தை சீனா புறக்கணித்தது மட்டுமின்றி சவுதி அரேபியா போன்ற நாடுகளும் புறக்கணித்து உள்ளன. இதற்கு பின் என்ன காரணம் உள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சீனா புறக்கணிக்க காரணம் – ஜம்மு காஷ்மீரில் கூட்டம் நடத்துவதை சீனா விரும்பவில்லை. லடாக் பிரச்சனை ஏற்கனவே உள்ளது. அதோடு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை சீனா ஆதரிக்கிறது. இதனால் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “சர்ச்சைக்குரிய ஜம்மு காஷ்மீர் பகுதியில் எந்த விதமான ஜி20 கூட்டங்களையும் நடத்துவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
துருக்கி புறக்கணிக்க காரணம் – துருக்கி பாகிஸ்தானின் நட்பு நாடு. இதனால் துருக்கியும் இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதை துருக்கி எதிர்த்து வரும் நிலையில் அந்த நாடும் இந்த கூட்டத்தை புறக்கணித்து உள்ளது. முக்கியமாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து துருக்கி பாகிஸ்தானை ஆதரித்து வருகிறது.
எகிப்து: இந்த நிகழ்வை எகிப்தும் புறக்கணித்து உள்ளது. இதற்கான காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு இன்றி இருப்பதை காரணம் காட்டி, ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டதை காரணம் காட்டி இந்த புறக்கணிப்பை எகிப்து மேற்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சவுதி அரேபியா: சவுதி அரேபியா இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. பெரும்பாலான முடிவுகளில் இந்தியாவுடன் சவுதி இருந்துள்ளது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் அவ்வப்போது இந்தியாவிற்கு சவுதி பிரஷர் கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த வகையில்தான் தற்போது காஷ்மீர் மோதல் காரணமாக இந்த நிகழ்வை சவுதி புறக்கணித்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.