திருப்பதி தரிசன டிக்கெட்கள்… வெறும் 3 நிமிடங்கள் தான்… 300 ரூபாய் டிக்கெட்கள் ரிலீஸ் எப்போது?

கோடை விடுமுறை இன்னும் ஒருவாரத்தில் முடிவடைய உள்ளது. அதற்குள் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை ஒருமுறையாவது தரிசித்து விட வேண்டும் என்று பக்தர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்ப திருமலையில் கூட்டம் அலைமோதி வருகிறது. விடுமுறையை ஒட்டி அதிகப்படியான பக்தர்கள் வருவதால் விஐபி உள்ளிட்ட சிறப்பு தரிசனங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

​ஏழுமலையான் தரிசனம்தற்போது இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் தரிசனம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று திருமலையில் 78 ஆயிரத்து 349 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 634 பேர் மொட்டை அடித்து கொண்டனர். உண்டியல் காணிக்கையாக 4.56 கோடி ரூபாய் கிடைத்தது. தரிசிக்க வரும் பக்தர்கள் மொத்தம் 15 குடோன்களில் தங்க வைக்கப்பட்டு படிப்படியாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அங்க பிரதட்சண டிக்கெட்கள்சாமி தரிசனம் செய்ய 18 மணி நேரம் ஆவதாக தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் 30 மணி நேரம் வரை சாமி தரிசனம் செய்வதற்கு நேரமானதாக தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் டிக்கெட் விற்பனை தொடர்பான கால அட்டவணையை வெளியிட்டிருந்தது. அதன்படி, அங்க பிரதட்சண டிக்கெட்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன.​
​திருப்பதி தரிசன டிக்கெட்கள் வேண்டுமா? எந்தெந்த தேதிகளில்… தேவஸ்தானம் புதிய அறிவிப்பு!​
சிறப்பு தரிசன டிக்கெட்கள்ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட 3 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடன் வரும் பெற்றோர், ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட்கள் ஆகியவையும் இன்றைய தினம் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.
300 ரூபாய் தரிசன டிக்கெட்கள்அடுத்தகட்டமாக நாளைய தினம் (மே 24) ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏழுமலையானை தரிசிப்பதற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. காலை 10 மணிக்கு பக்தர்கள் அனைவரும் தயாராக காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் டிக்கெட் முன்பதிவு செய்ய பெரிதும் ஆர்வம் அதிகரித்து காணப்படுவதால் சில நிமிடங்களில் காலியாக வாய்ப்புள்ளது.
அதிகாரப்பூர்வ தேவஸ்தான இணையதளம்இதற்காக தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://online.tirupatibalaji.ap.gov.in/home/dashboard) மட்டும் பயன்படுத்த வேண்டும். போலி இணையதளங்களை நம்பி பணத்தை ஏமாந்துவிடாதீர்கள். வாட்ஸ்-அப்பில் உலவும் லிங்குகளை கிளிக் செய்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாம் எனத் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.​
​திருப்பதி தரிசனமா… போலி டிக்கெட்டை எப்படி கண்டறிவது? OTPல தான் விஷயமே இருக்கு!​
​திருமலையில் விடுதி டிக்கெட்கள்இதையடுத்து திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு டிக்கெட்கள் வரும் மே 25ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. இதற்கேற்ப பக்தர்கள் உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.