மனைவியை பணயம் வைத்து சூதாட்டம்… தோற்றதால் நண்பருடன் உறவு கொள்ள வற்புறுத்தல்.. பகீர் சம்பவம்!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர்தான் இப்படி ஒரு பகீர் சம்பவத்துக்கு ஆளாகியுள்ளார். புகார் அளித்த பெண்ணுக்கு அந்த நபருடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மதுவுக்கு அடிமையான அவரது கணவர் சூதாட்டத்திலும் ஆர்வம் கொண்டவராம்.

தினமும் குடிக்காமலும் நண்பர்களுடன் சூதாடாமலும் வீட்டிற்கு வரமாட்டாராம் இந்த உத்தம புருஷர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல போதையுடன் வீட்டிற்கு வந்த கணவர், தனது நண்பருடன் உறவு கொள்ளுமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார்.

முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் மீண்டும் இன்பச் சுற்றுலா… ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் நண்பர்களுடன் சூதாடிய அந்த நபர், தோற்று போய் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். பின்னர் தனது மனைவியை பணயம் வைத்து சூதாடி இருக்கிறார். அதிலும் தோற்ற அந்த நபர் சொன்னப்படியே தன்னுடைய மனைவியை அனுப்பி வைப்பதாக தனது நண்பருக்கு வாக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய அவர், தனது மனைவியை நண்பருடன் செல்லுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். கணவர் சொன்னதை கேட்டு நிலைகுலைந்து போன மனைவி, முடியவே முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கணவர் கண்மூடித்தனமாக அவரை தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் இனியும் அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்த அந்த பெண் தனது கணவர் மற்றும் அவரது நண்பரிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு லிசாடி நகர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்யும் திமுக… புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!

தனது கணவர் மீது அந்த பெண் கூறிய குற்றச்சாட்டுக்களை கேட்டு அதிர்ந்து போன போலீசார், பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவருடைய கணவர் மீதும் நண்பர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் கணவரையும் தேடி வருகின்றனர். சூதாட்டத்தில் கணவர் ஒருவர், மனைவியை பணயமாக வைத்து விளையாடியதும், தோற்றதால் நண்பருடன் செல்ல அவரை கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.