
அரசுமுறை பயணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் கென்யா நாடுகளுக்கு சமீபத்தில் சென்று வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது முகநூல் பதிவில் லூங் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது நண்பரும் சிங்கப்பூர் பிரதமருமான லீ சியென் லூங் விரைவில் குணம் பெற விரும்பும் வகையில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.