ராகுல் காந்தி உழைக்கும் மக்கள் பக்கம் எப்போதும் இருப்பதாகவும், பிரதமர் மோடியோ கோடீஸ்வரர்களின் பக்கத்தில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
ராகுல் காந்தி – லாரி டிரைவர்கள் சந்திப்புகாங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முகமாக உள்ளவர் ராகுல் காந்தி. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதன் பலனாகவே காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்ததாகவும் கூறுகிறார்கள். அடுத்தகட்ட நடைபயணத்தை விரைவில் தொடங்க உள்ள அவர் எந்த திட்டமிடலும் இல்லாமல் லாரி டிரைவர்களுடன் பேசி, அவர்களோடு பயணித்து, அவர்கள் தங்குமிடங்களையும் பார்த்துள்ளார்.
லாரி பயணம்!இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி வசித்து வருகிறார். தனது தாய் சோனியாவை சந்திப்பதற்காக நேற்று டெல்லியில் இருந்து ராகுல் காந்தி காரில் புறப்பட்டுள்ளார். அவருடன் அவரது பாதுகாப்பு படையினர் சென்றனர். ராகுல் காந்தியின் கார் ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே சென்ற போது திடீரென காரை நிறுத்தக்கூறினார் ராகுல்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள்காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி சாலையோரம் இருந்த லாரி டிரைவர்களிடம் பேசினார். பின்னர் அவர்களது லாரியில் ஏறினார். சண்டிகர் வரை லாரியில் பயணித்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவர்கள் தங்கும் இடத்தையும் பார்வையிட்டார்.
அவர் அப்படி, இவர் இப்படி?இது தொடர்பான புகைப்படங்கள், வெளியான நிலையில் சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியுள்ளது. ஏழை, எளிய உழைக்கும் மக்களின் பின்னால் ராகுல் காந்தி எப்போதும் இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதானியுடன் மோடி இருக்கும் புகைப்படத்தையும், ராகுல் லாரி ஓட்டுநர்களுடன் பேசும் புகைப்படத்தையும் ஒட்டி வெளியிட்டுள்ளனர்.