ஃபுளோரிடா மாகாணத்தில் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
விண்ணில் பாய்ந்த டிராகன் விண்கலம்
நேற்று ஃபுளோரிடா மாகாணம், மெரிட் என்ற தீவில் கென்னடி ஏவுதளத்தில் ஸ்பேஸ்-எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த டிராகன் விண்கலத்தில் இரண்டு சவூதி அரேபியர்களும், இரு அமெரிக்கர்களும் சென்றுள்ளனர்.
முதல்முறையாக அரேபியாவைச் சேர்ந்த பர்னாவி என்ற பெண் விண்வெளிக்கு பயணித்துள்ளார்.
இவருடன், சவூதியைச் சேர்ந்த அலி அல்கர்னி, அமெரிக்க கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் பைலட் ஜான் ஷோஃப்னர் ஆகியோரை விண்வெளி நிலையத்திற்கு (ISS) டிராகன் விண்கலம் கொண்டு சென்றது.
இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 10 நாட்கள் இருப்பர். அதன் பின்னர் பூமி திரும்ப உள்ளனர்.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், விண்கலத்தில் பயணம் செய்த 4 பேருக்கும் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
The spacecraft carried the first Saudi woman into space, #RayyanahBarnawi from the Kingdom of Saudi Arabia along with Saudi’s Ali Alqarni, American Commander Peggy Whitson, and Pilot John Shoffner to the International Space Station (ISS). pic.twitter.com/WXmaj8txOX
— News Daily 24 (@nd24_news) May 22, 2023
In a historic achievement, Elon Musk’s spacecraft manufacturing company successfully launched Saudi Arabia’s first astronauts to the International Space Station (ISS). https://t.co/4imKebbgUW #SpaceMilestone #HistoricLaunch #SaudiAstronauts #WomenSpace #internationalspacestation pic.twitter.com/twK8kLQYAD
— Channeliam.com (@Channeliam) May 23, 2023