ஸ்டாலின் சிங்கப்பூர் கிளம்பியாச்சு… இந்த வாட்டி 9 நாட்கள்… எத்தனை கோடி ரூபாய் முதலீடுகள்?

சிங்கப்பூர் புறப்படும் முன்பு இன்று (மே 23) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர்

, வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கிறோம்.

பிரதமரின் ஜப்பான் பயணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

ஸ்டாலின் 9 நாட்கள் வெளிநாட்டு பயணம்

அதன் அடிப்படையில் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்கிறேன். என்னுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் வருகிறார்கள். ஏற்கனவே கடந்த ஆண்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு சென்று பல்வேறு தொழில் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டம்

இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். முதலீட்டாளர்களை ஈர்க்க நேரிலும், மாநாட்டின் மூலமாகவும் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த பயணத்தின் நோக்கம் 2024ல் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு புதிய தொழில் நிறுவனங்களை அழைத்து வருவது தான் என்று தெரிவித்தார்.

ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் முதலீடுகள்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது 6,100 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 15,100 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் 6 பெரிய நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதில் ஷராப் நிறுவனம், லூலூ நிறுவனம் உள்ளிட்டவை அடங்கும். லூலூ கோவையில் தனது திட்டத்தை தொடங்கிவிட்டது.

சென்னையில் லூலூ நிறுவனம்

அடுத்தகட்டமாக சென்னையில் செயல்படுத்த நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிலம் கிடைத்ததும் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன.

எந்தெந்த நாடுகள்

இவற்றை முழுமையாக அமல்படுத்தும் போது 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 பேருக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். இதேபோல் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் தற்போது சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்கிறோம். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களை சந்திக்க உள்ளோம். இந்த 9 நாட்கள் பயணத்தில் எந்தெந்த நாடுகள் இடம்பெறும் என்பது அங்கு சென்ற பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.