நியூயார்க்:
அமெரிக்காவில் கார் ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் போதையில் இருந்த அக்குழந்தையின் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர். எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் காரிலேயே தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோருக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஹோல்ம்ஸ் நகர போலீஸாருக்கு நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண், தனது 2 வயது பெண் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, அங்கு மருத்துவருடன் போலீஸார் சென்றனர்.
அந்தக் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதே சமயத்தில், அந்தக் குழந்தையின் உடல் 107 டிகிரியில் கொதிப்பதாகவும் மருத்துவர் தெரிவித்தார். பொதுவாக, ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடல் குளிர்ந்துவிடும். இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
திடுக்கிடும் தகவல்:
இதனைத் தொடர்ந்து, அக்குழந்தையின் பெற்றோர்களான மெக்கெலன் (32), கேத்ரீன் (23) ஆகியோரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் நெஞ்சை பதற வைக்கும் உண்மை வெளியானது. அதற்கு முந்தைய தினம் இரவு கணவனும், மனைவியும் தங்கள் 4 வயது மற்றும் இரண்டு வயது பெண் குழந்தைகளுடன் காரில் வெளியே சென்றுள்ளனர். இரவு உணவை ஓட்டலில் சாப்பிட்ட அவர்கள், பின்னர் ஓரிடத்தில் மெத்தமேட்டமைன் என்ற போதைப்பொருளை உட்கொண்டுள்ளனர்.
பின் சீட்டில் தூங்கிய குழந்தை:
அதன் பிறகு, சிறிது நேரம் கழித்து காரில் சுற்றிய அவர்கள், நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களின் 2 வயது பெண் குழந்தை பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. போதையில் இருந்த அவர்கள், பிறகு குழந்தையை தூக்கிச் செல்லலாம் என ஒரு குழந்தையை மட்டும் வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போதையிலேயே தூங்கிவிட்டனர்.
அடப்பாவிகளா.. பலாத்காரம் செய்ய வந்தவனை கொலை செய்த பெண்.. 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்
வெந்து இறந்த பரிதாபம்:
இதையடுத்து, மறு நாள் மதியம் 3 மணிக்குதான் 2-வது குழந்தை காரில் இருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. பின்னர் உடனடியாக ஓடிச்சென்று காரில் இருந்த குழந்தையை தூக்கிய போது, அந்தக் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது. மேலும், அந்தக் குழந்தையின் உடலை தொட முடியாத அளவுக்கு வெப்பம் இருந்திருக்கிறது மூடப்பட்ட காரில் இருந்ததால் காரின் வெப்பநிலை அதிகரித்து அந்தக் குழந்தை சுமார் 115 டிகிரி வெப்பநிலையில் துடிதுடித்து பரிதாபமாக இறந்துபோயுள்ளது.
பெற்றோர் கைது:
இந்நிலையில், குழந்தையை அலட்சியமாக கையாண்டது, குழந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்தது, போதைப்பொருட்களை உட்கொண்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மெக்கெலன், கேத்ரீன் மீது பதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். பெற்றோரின் போதைப்பழக்கத்தால் குழந்தை அநியாயமாக வெந்து இறந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.