தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்பொழுது பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேருவுக்கு சேலம் மாவட்டமும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தேனி மாவட்டமும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலுவுக்கு திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு தர்மபுரி மாவட்டமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு தென்காசி மாவட்டமும், நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு ராமநாதபுரம் மாவட்டமும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கு காஞ்சிபுரம் மாவட்டமும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு திருநெல்வேலி மாவட்டமும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு மயிலாடுதுறை மாவட்டமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோயம்புத்தூர் மாவட்டமும், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டமும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்திக்கு திருவள்ளூர் மாவட்டமும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு பெரம்பலூர் மாவட்டமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தஞ்சாவூர் மாவட்டமும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு நாகப்பட்டினம் மாவட்டமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.