Captain Miller : அடுத்தடுத்து சிக்கலுக்குள்ளாகும் 'கேப்டன் மில்லர்'… படப்பிடிப்பு நிறுத்தப்படுமா?

சென்னை : தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் குண்டுவெடிப்பு காட்சிகள் அனுமதி பெறாமல் படமாக்கப்படுவதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

நடிகர் தனுஷ், கோலிவுட், பாலிவுட், டொலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து மாஸ்காட்டி வருகிறார்.

திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் என ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

கேப்டன் மில்லர் : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் 1930 மற்றும் 40 காலகட்டத்தில் எடுக்கப்படும் படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதி வருகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரிய பட்ஜெட் படம்: கேப்டன் திரைப்படத்தின் கதை சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவரக்கூடும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்திற்காக ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளனர். தனுஷ் இதுவரை நடித்த படங்களை விட இத்திரைப்படம் அதிக பட்ஜெட்டிலும்,பெரும் பொருட்செலவிலும் உருவாகி வருகிறது.

Actor Dhanush movie captain miller shooting without permission near madurai

அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு : இப்படத்தின் படப்பிடிப்பு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தாங்கல் மண்டலத்தில் நடைபெற்ற போது, பாதுகாப்பு மண்டலத்தில் சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்தை அடுத்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின் முறையாக அனுமதி பெற்று கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடங்கியது.

படப்பிடிப்பு நிறுத்தப்படுமா? இந்நிலையில், பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்ட அரிட்டாப்பட்டி பகுதியில், கேப்டன் மில்லர் படத்திற்கு உரிய அனுமதி வாங்காமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்படுவதாக அரிட்டாபட்டி பாதுகாப்புச் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.