ஹைதராபாத்: தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் டிம்பிள் ஹயாதி காவல் ஆய்வாளரின் காரை தனது காரை வைத்து இடித்தது மட்டுமின்றி ஆவேசமாக எட்டி உதைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளன.
நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள டிம்பிள் ஹயாத்திக்கும் ஹைதரபாத் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இப்படியொரு சம்பவத்தை நடிகை டிம்பிள் ஹயாதி செய்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் தனது வக்கீல் உடன் ஆஜரானார் நடிகை.
பார்க்கிங் பிரச்சனை: ஹைதராபாத்தில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனி பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் நடிகை டிம்பிள் ஹயாதி வசித்து வருகிறார். அதே அபார்ட்மென்டில் தான் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேவும் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே பார்க்கிங் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
நடிகை கார் நிறுத்தும் இடத்தில் போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேவும் தனது காரை நிறுத்துவதால் தான் நடிகை இப்படி நடந்து கொண்டார் எனக் கூறுகின்றனர்.

காரை எட்டி உதைத்து ரகளை: இந்நிலையில், சமீபத்தில் தனது காதல் கணவர் டேவிட் உடன் பார்க்கிங்கில் தங்கள் காரை நிறுத்த வந்த நேரத்தில் அந்த இடத்தில் காவல் ஆணையரின் கார் இருப்பதை பார்த்து நடிகை ஆவேசம் அடைந்துள்ளார்.
நடிகையின் கணவர் டேவிட் காரை வைத்து ராகுல் ஹெக்டேவின் காரை இடித்துள்ளார். மேலும், காரில் இறங்கி கோபத்துடன் இறங்கி வந்த நடிகை டிம்பிள் ஹயாத்தி அந்த போலீஸாரின் காரை எட்டி உதைத்து கூச்சல் போட்டுள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

நடிகை மீது பாய்ந்தது வழக்கு: பார்க்கிங் ஏரியாவில் சத்தம் கேட்டதும் ராகுல் ஹெக்டே அங்கு வந்து பார்க்க தனது காரை நடிகை டேமேஜ் செய்வதை அறிந்து ஷாக் ஆனார். காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேவுடன் நடிகை டிம்பிள் ஹயாத்தியும் அவரது கணவர் டேவிட்டும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இருவர் மீது ராகுல் ஹெக்டே போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காவல் நிலையத்துக்கு தனது வழக்கறிஞருடன் நடிகை டிம்பிள் ஹயாத்தி ஆஜர் ஆனார். நடிகை டிம்பிள் ஹயாத்தியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உடனே சமூக வலைதளத்தில் அதிகாரத்தை வைத்து உங்க தவறை மறைக்க நினைத்தால் அது முடியாது. நீதி தான் வெல்லும் என நடிகை டிம்பிள் ஹயாத்தி ட்வீட் போட்டு இருப்பது மேலும், சர்ச்சையை கிளப்பி உள்ளது. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள டிம்பிள் ஹயாத்தி தமிழில் பிரபுதேவாவின் தேவி 2 மற்றும் விஷாலின் வீரமே வாகை சூடும் படங்களில் நடித்துள்ளார்.