இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றிப்படம் என்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
எனவே இம்முறை லியோ திரைப்படத்தை விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக்கும் முனைப்பில் இருக்கின்றார் விஜய். அதன் காரணமாகவே தன்னை முழுவதுமாக லோகேஷிடம் ஒப்படைத்துள்ளார். எனவே தான் மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் அம்சங்களை சேர்த்திருந்த விஜய் லியோ படத்தை தன் ஸ்டைலிலேயே உருவாக்கி வருகின்றார்.
இதன் காரணமாகவே இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. என்னதான் இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆனாலும் படத்தை பற்றி நாளுக்கு நாள் இணையத்தில் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
சமீபத்தில் கூட லியோ படத்தில் சஞ்சய் தத் விஜய்யின் அப்பாவாக நடிப்பதாக சில தகவல்கள் பரவின. மேலும் லியோ திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கானின் கதாபாத்திரம் பற்றியும் பேசப்பட்டு வருகின்றது. என்னதான் இந்த தகவல்கள் உண்மையா இல்லை வதந்தியா என்பது பற்றி தெரியவில்லை என்றாலும் இத்தகவல்கள் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வருகின்றது.
இந்நிலையில் தற்போது லியோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாக இருக்கின்றன. இதையடுத்து இப்படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பின் காரணமாக லியோ படத்தின் பூஜை துவங்கும் முன்பே இப்படத்தின் டிஜிட்டல் உரிமை பலகோடிக்கு வியாபாரம் ஆனது. இவ்வாறு இருக்கையில் லியோ படத்தின் ஒட்டுமொத்த வியாபாரம் கிட்டத்தட்ட 400 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு மிக முக்கியமான காரணம் தளபதி விஜய் தான். அவரின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்து வர தற்போது அவரின் வியாபாரம் 400 கோடி வரை சென்றுள்ளது. இதன் காரணமாகவே அவரின் அடுத்த படமான தளபதி 68 திரைப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 200 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.