இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பொதுவாக ரஜினியின் படம் என்றாலே காதல், காமெடி, சண்டை, எமோஷன் என அனைத்து கமர்ஷியல் அம்சங்கள் இடம்பெறும். கடந்த நாற்பது ஆண்டுகளாக இதே பார்முலாவை ரஜினி பின்பற்றி வந்து வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்தார். ஆனால் தற்போது காலம் மாற மாற இந்த பார்முலா பழசாகிவிட்டது.
அதன் காரணமாகவே ரஜினியின் படங்கள் சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றிகளை பெறாமல் போனது.எனவே இதனை உணர்ந்த ரஜினி தற்போது தன் ரூட்டை மாற்றியுள்ளார். நெல்சன், ஞானவேல், லோகேஷ் என கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு படங்களை இயக்கம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார் ரஜினி.
Sarathbabu: படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படிதான்..ரஜினியுடனான நட்பு பற்றி பேசிய சரத்பாபு..!
இந்நிலையில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்ததாக ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடித்து வருகின்றார். நெல்சனின் ஜெயிலர் திரைப்படம் டார்க் காமெடி ஜானரில் உருவாகும் நிலையில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றார் ரஜினி.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
பாட்ஷா படத்திற்கு பிறகு லால் சலாம் படத்தில் ரஜினி முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து ஜெய் பீம் புகழ் ஞானவேலின் இயக்கத்தில் ரஜினி தன் 170 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் இப்படம் ரஜினியின் படங்களிலில் இருந்த்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்ற தகவல்கள் வருகின்றன.
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். மேலும் ஜெயிலர் படத்தை போல இப்படமும் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக உருவாக இருக்கின்றதாம். பொதுவாக ரஜினி மல்டி ஸ்டாரர் படத்தில் நடிக்க விரும்பமாட்டார் என்ற ஒரு செய்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
ஆனால் சமீபகாலமாக ஜெயிலர், தலைவர் 170 என மல்டி ஸ்டாரர் படங்களில் ரஜினி நடித்து வருகின்றார். அதற்கு மிகமுக்கிய காரணம் கமலின் விக்ரம் திரைப்படம் தானாம். விக்ரம் படமும் ஒரு மல்டி ஸ்டாரர் திரைப்படம் தான். மேலும் அப்படத்தில் கமலுக்கு ஜோடியே கிடையாது.
அதைப்போல தலைவர் 170 படமும் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக உருவாகின்றது. மேலும் இப்படத்திலும் ரஜினிக்கு ஜோடியே கிடையாதாம். இந்நிலையில் தற்போது ரஜினி தன் பழைய பார்முலாவை விட்டுவிட்டு தற்போது ட்ரெண்டிற்கு ஏற்ப கமலின் பார்முலாவை பின்பற்றுகிறார் என சிலர் பேசி வருகின்றனர்.
எந்த பார்முலாவாக இருந்தாலும் படம் நன்றாக இருந்து வெற்றி பெற்றால் போதும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. எனவே இனி வரும் காலங்களில் நம் வித்யாசமான தலைவரை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.