Rajinikanth: ரஜினியை அறைந்தும் தலைவர் ரசிகர்களிடம் திட்டு வாங்காத ஒரே நடிகர் சரத்பாபு

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Superstar Rajinikanth:படத்தில் நடிப்புக்காக கூட ரஜினியை யாராவது அறைந்தால் தலைவர் ரசிகர்கள் கொந்தளித்துவிடுவார்கள். ஆனால் அதற்கு விதிவிலக்கு சரத்பாபு.

​ரஜினிகாந்த்​சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை படத்தில் அறைய சக நடிகர்கள் அஞ்சுவார்கள். ரஜினி மீது கை வைத்தால் அவரின் ரசிகர்கள் கோபம் அடைந்து விளாசிவிடுவார்கள் என்பதே அந்த பயத்திற்கு காரணம். அதனால் ரஜினியை அடிக்கும் கதாபாத்திரம் வந்தால் அதை ஏற்க நடிகர்கள் தயங்குவார்கள். ரஜினியே சொன்னாலும் கூட சார், வேண்டாம் சார், உங்க ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பார்கள். ஆனால் சரத்பாபு அப்படி அல்ல.
விஜய் ஆண்டனி​ஹோட்டலில் உணவு பரிமாறிய விஜய் ஆண்டனி!​
​தலைவர்​வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்திருந்தார் சரத்பாபு. அந்த மூன்று படங்களிலும் ரஜினி அடி வாங்குவார். வேலைக்காரன் மற்றும் அண்ணாமலை ஆகிய படங்களில் கோபத்தில் ரஜினியின் கன்னத்தில் அறைந்துவிடுவார் சரத்பாபு. முத்து படத்திலோ வேலையாளை வைத்து ரஜினியை அடித்து துவைக்க வைத்தார். ஆனால் அந்த காட்சிகளை பார்த்த ரஜினி ரசிகர்கள் யாரும் சரத்பாபு மீது கோபப்பட்டு திட்டவில்லை.
​சரத்பாபு​சரத்பாபு இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்து அவர் ரஜினியை அறைந்திருந்தால் தலைவர் ரசிகர்கள் கோபப்பட்டிருப்பார்கள். ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் தலைவரை அறைந்த ஒரே நடிகர் சரத்பாபு தான். அண்ணாமலை படத்தில் அசோக்காக நடித்த சரத்பாபுவிடம் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது, வேறு ஒரு நடிகராக இருந்தால், ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகப் போகிறீர்கள், ஜாக்கிரதை என்பேன். ஆனால் நீங்கள் ரஜினியை அறைந்தால் அவர் ரசிகர்களுக்கு பிரச்சனை இல்லை என நினைக்கிறேன் என கூறியிருக்கிறார்.

​Sarath Babu: நடிகர் அல்ல போலீஸ்காரராக ஆசைப்பட்டார் சரத்பாபுனு உங்களுக்கு தெரியுமா?

​முடியும்​நீங்கள் ரஜினி சாரை தாராளமாக அறையலாம். அவரின் ரசிகர்கள் கோபப்பட மாட்டார்கள். உங்களால் மட்டும் தான் முடியும் என அண்ணாமலை படத்தில் நடித்தபோது நிழல்கள் ரவி தன்னிடம் கூறியதாக சரத்பாபு பேட்டி ஒன்றில் தரிவித்தார். அந்த அதிசயம் சரத்பாபுவுக்கு மட்டுமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
​இரங்கல்​சரத்பாபுவின் மறைவு குறித்து ட்வீட் செய்தார் ரஜினிகாந்த். அவர் ட்விட்டரில் கூறியதாவது, இன்று(நேற்று)என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்றார்.
​ரஜினி ரசிகர்கள்​சரத்பாபு பற்றி ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது, போய் வாருங்கள் சரத்பாபு சார். நீங்கள் என்றும் எங்கள் நினைவில் இருப்பீர்கள். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். நண்பரை இழந்து வாடுகிறார் தலைவர். அந்த இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் தான் தலைவருக்கு கொடுக்க வேண்டும். தைரியமாக இருங்கள் தலைவரே என தெரிவித்துள்ளனர்.

​கதாபாத்திரம்​நாற்பது படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் சரத்பாபு. ஆனால் அவர் துணை நடிகராக நடித்த படங்கள் கொண்டாடப்படுகிறது. அது குறித்து சரத்பாபு முன்பு கூறியதாவது, நான் நடிகராக விரும்பினேன். தமிழ் மற்றும் தெலுங்கில் 40 படங்களில் ஹீரோவாக நடித்தேன். ஆனால் துணை கதாபாத்திரங்கள் அதன் ஸ்க்ரிப்ட்டுக்காக பேசப்படுகிறது. 30 ஆண்டுகள் கழித்தும் அண்ணாமலை பற்றி பேசுகிறார்கள். அதற்காகத் தான் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.