RRR Actor Ray Stevenson : ஆர்ஆர்ஆர் பட நடிகர் திடீரென உயிரிழந்தார்.. மரணத்திற்கு காரணம் தெரியவில்லை!

சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்த ரே ஸ்டீவன்சன் திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 58.

இவர் வார் சோன், தி தியரி ஆஃப் ஃப்ளைட் மற்றும் எச்பிஓ படங்களிலும், தொலைக்காட்சித் தொடரான ரோம் ஆகியவற்றிலும் நடித்து பிரபலமானார்.

இவரது மரணம் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆர்ஆர்ஆர் : எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்ஆர்ஆர்). இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண்,அஜய்தேவ்கன்,ஆலியாபட்,ஸ்ரேயா சமுத்திரக்கனி என பலர் நடித்திருந்தனர். பான் இந்திய திரைப்படமாக வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.

 RRR Villain Actor Ray Stevenson passes away

ஆஸ்கர் விருது : சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்டு உருவான பீரியட் படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை வென்றது. அதே போல சசிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருதை வென்றார்.

ரே ஸ்டீவன்சன் காலமானார்: இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக கவர்னர் ஸ்காட் பக்ஸனாக கதாபாத்திரத்தில் நடித்த அயர்லாந்து நடிகர் ‘ரே ஸ்டீவன்சன்’திடீரென உயிரிழந்துள்ளார். 58 வயதாகும் இவர் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இறப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.

RRR Villain Actor Ray Stevenson passes away

திரைத்துறையினர் சோகம் : நடிகர் ரே ஸ்டீவன்சன் படங்களில் மட்டுமின்றி டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படக்கு ஆஸ்கர் விருதை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் போது ஸ்டீவன்சன் இறந்துள்ளது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதயத்தில் இருப்பீர்கள் : மேலும், RRR படக்குழு தனது ட்விட்டரில், மறைந்த நடிகருக்கு உணர்ச்சிபூர்வமான அஞ்சலியை வெளியிட்டது. “அணியில் உள்ள நம் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி. அமைதியாக இருங்கள், ரே ஸ்டீவன்சன். நீங்கள் என்றென்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருப்பீர்கள், SIR SCOTT” என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.