மும்பை: கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் பக்கமே தலை வைத்து படுக்காமல் இருந்து வந்த அந்த பிரியமான நடிகை மீண்டும் தனது இடத்தை பாலிவுட்டில் பிடிக்கத்தான் இப்படி தொடர்ந்து ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் என்கின்றனர்.
ஹாலிவுட்டில் பெரிய டாப் ஹீரோயினாக மாறிவிடலாம் என பாலிவுட் படங்களை புறக்கணித்து விட்டு ஓடிப் போனவர் தான் அந்த நடிகை. ஆனால், தற்போது தன்னை கார்னர் செய்ததால் தான் கிளம்பினேன் என காதில் பூ சுற்றி வருகிறார் என பிரபலம் ஒருவர் விளாசி உள்ளார்.
உள்ளாடையை காட்ட சொன்னார் என நடிகை பேசியுள்ள நிலையில், இப்போ படங்களில் அதுவும் இல்லாமல் நடித்து வருகிறாரே என பாலிவுட்டில் பிரபலம் ஒருவர் பங்கமாக கலாய்த்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹாலிவுட்டில் வாய்ப்பே இல்லை: பாலிவுட்டில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை என்பதால் இங்கே இருந்து ஹாலிவுட் மோகத்தால் கிளம்பும் நடிகைகளின் வரிசையில் தான் அந்த நடிகையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்றார் என்றும் ஆனால், ஆரம்பத்தில் வில்லியாகவும் அதன் பின்னர் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து வந்த அந்த நடிகைக்கு சமீப காலமாக சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் நடிகை பற்றி புட்டு புட்டு வைத்திருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
துரத்தி அடித்து விட்டனர்: ஒரு சில வெப்சீரிஸில் ஆபாச நடிகையாக நடித்து வருகிறார் அந்த நடிகை என்றும் பெரிய படங்களுக்கு எல்லாம் இவர் செட் ஆகவே மாட்டார் என துரத்தி அடித்த நிலையில் தான் மீண்டும் பாலிவுட்டில் பட வாய்ப்புகளை பிடிக்க இப்படி பிட்டு பிட்டாக போட்டு வருகிறார் அந்த நடிகை என அந்த தயாரிப்பாளர் தனது படக்குழுவினரிடம் பேசி நடிகை பற்றி பல அதிர்ச்சி தகவல்களையும் சொல்லி சிரித்திருக்கிறாராம்.
இயக்குநர் பற்றி அவதூறு: சமீபத்தில், நடிகை இயக்குநர் ஒருவர் குறித்து அவதூறு சொல்லி சர்ச்சையை கிளப்பி உள்ளார். மேலும், முன்னதாக பாலிவுட்டில் இருந்து தன்னை ஒதுக்கியதாகவும் கூறினார். அந்த காலத்தில் இருந்து இதுவரை நடித்துக் கொண்டிருக்கும் பல நடிகைகளும் இங்கே நடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இயக்குநர் மீது அவதூறு சொன்ன நடிகை இப்போ ஒட்டுத் துணிக் கூட இல்லாமல் நடித்து வருகிறாரே, அந்த இயக்குநர் குறித்து இன்னும் 10 வருஷம் கழித்து பேசுவாரா? என்று கிண்டல் அடித்துள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

எல்லாம் பாலிவுட்டில் நடிக்கத்தான்: நடிகை இப்படி தொடர்ந்து பேசுவதற்கு காரணமே அந்த சர்ச்சையை பயன்படுத்திக் கொண்டு பாலிவுட்டில் ஏதாவது ஒரு முன்னணி நடிகர் படத்தில் நடித்து பழையபடி பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிடலாம் என்கிற வியாபார யுக்தியை தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்றும் முன்னணி நடிகையாக இருந்தவர் தானே, அப்போதே இதையெல்லாம் வெளிப்படையாக பேசி இருந்தால் யாரும் கேட்காமலா போயிருப்பர் என நடிகை தற்போது ஆடி வருவது டபுள் கேம் என ஒட்டுமொத்தமாக தனது படக்குழுவினரிடம் நடிகையை பற்றிய அவதூறு பேச்சுக்களை அந்த தயாரிப்பாளர் அடுக்கி உள்ளார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.