இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஹிட்லரின் நாஜிக் கொடியுடன் வெள்ளை மாளிகையில் தாக்குதல் நடத்த முற்பட்ட இந்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். வேலை நிமித்தமாக அமெரிக்கா சென்று பின் அங்கேயே குடியுரிமை பெற்று இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் சட்டவிரோதமாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் இந்தியர்களும் உண்டு. சமீபத்தில் அப்படி சட்டவிரோதமாக அமெரிக்காவில் ஊடுறுவ முயன்ற குஜராத்தைச் சேர்ந்த குடும்பம் பனியில் உறைந்து பலியானது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அமெரிக்கா வாழ் இந்தியர்களால் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி கணிசமாக மேம்பட்டு வருகிறது. இந்தசூழலில் அமெரிக்க அதிபர் ஜோபிடனை கொல்ல முயன்ற இந்தியரை போலீசார் கைது செய்துள்ளனர். மிஸ்சௌரியின் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான சாய் வர்சித் கண்டுலா. கடந்த 2022ம் ஆண்இல் மார்குயேட் உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த மே 22ம் தேதி வாசிங்டன் டிசியில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையை நோக்கி கண்டுலா, ஹிட்லரின் ஸ்வஸ்திக் முத்திரை பதித்த நாஜிக் கொடியுடன் ஒரு டிரக்கை ஒட்டிச் சென்றுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முயன்றபோது டிரக்கை கொண்டு வெள்ளை மாளிகையில் இடித்து உட்புக முயற்சித்துள்ளார். வண்டி மோதி நின்ற பின்னர் வெளியே வந்த கண்டுலா, நாஜிக் கொடியை உயர்த்தி பிடித்து, அதிபரை கொல்ல வந்துள்ளதாக கத்தியுள்ளார். சுதாரித்த அதிகாரிகள் அந்த நபரை கைது செய்தனர்.
நாஜிக் கொடியை பிடுங்கி தூர எறிந்த போலீஸ் அதிகாரிகள், சம்பந்தபட்ட இந்தியரிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘சாய் வர்சித் தீவிர வலதுசாரியாக அறியப்படுகிறார். ஹிட்லரைப் போல சிறந்த தலைவர் இல்லை எனவும், தனது வழியில் குறுக்கே இருக்கும் அனைத்தையும் தகர்த்து அதிகாரத்தை கைப்பற்றுவதே தனது நோக்கம் எனவும் சாய் வர்சித் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்துள்ளது. அதிபரை கொல்லை முயன்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தால் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர்’’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாய் வர்சித் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஆல் மூளைச் சலவை செய்யப்பட்ட நபர் எனவும், காவி பயங்கரவாதத்தை உலகம் உணர வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் உயர்சாதி வகுப்பினர், அமெரிக்காவில் இந்துக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக எதிர்வினை ஆற்றிவருகின்றனர். அமெரிக்க அதிபரை கொல்ல முயன்ற இந்தியரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.