PSA குழுமத்தின் சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் நான்காவது மாடலாக C3X செடான் கார் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், எலக்ட்ரிக் C3X காரின் அறிமுகம் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படலாம்.
இந்திய சந்தையில் சிட்ரோன் C5 ஏர்கிராஸ், C3, எலக்ட்ரிக் eC3 C3 ஏர்கிராஸ் காரை தொடர்ந்து வரவுள்ள C3X செடானில் சக்திவாய்ந்த 1.2l டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்ற மாடலாக விளங்கும். சமீபத்தில் வெளியான சி3 ஏர்கிராஸ் ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில், எலக்ட்ரிக் C3 ஏர்கிராஸ் 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.
Citroen C3X
கிராஸ்ஓவர் கார்களை போன்ற தோற்ற அமைப்பினை பெற்ற சிட்ரோன் C3X காரின் நீளம் 4.3 மீட்டர் முதல் 4.4 மீட்டர் வரை அமைந்திருக்கலாம். விற்பனையில் உள்ள சி3 காரின் தோற்ற அமைப்பினை பெற்ற பம்பர் உள்ளிட்ட அம்சங்களுடன் பல்வேறு வசதிகளை பெற்ற இன்டிரியரில் கனெக்ட்டிவிட்டி வசதிகள் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல், எலக்ட்ரிக் அட்ஜெஸ்மென்ட் இருக்கை மற்றும் HVAC கட்டுப்பாடுகள் கொண்டிருக்கலாம்.
செடான் ரக சி3எக்ஸ் காரில் 1.2 லிட்டர், 110 ஹெச்பி பவர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வரக்கூடும். பெட்ரோல் மாடலை தொடர்ந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த வரிசையில் மின்சார மாடல் விற்பனைக்கு வரக்கூடும்.
புதிய C3X காருக்கு போட்டியாக ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, வோக்ஸ்வாகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.