இப்படி விட்டுட்டீங்களே.. திடீரென உயிரிழந்த அம்மா.. பவித்ரா போட்ட உருக்கமான பதிவு!

சென்னை : அம்மாவை இழந்து தவிக்கும் பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவினை போட்டு அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் பவித்ரா.

அதன்பிறகு மாடலிங் துறையில் ஒரு சில காலங்கள் பணியாற்றியுள்ளார்.

பவித்ரா லட்சுமி:இதையடுத்து, ‘3 சீசன் ஆப் லவ் ஸ்டோரி’ மற்றும் மலையாள படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பவித்ரா லக்ஷ்மி, உல்லாசம் என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு பல குறும்படங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் செய்து வந்த பவித்ரா லட்சுமி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நாய் சேகர் படத்தில் : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பவித்ரா லக்‌ஷ்மிக்கு சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவிர்லை மேலும், ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், ஹீரோயினாக வலம் வருகிறார்.

cook with comali fame pavithra lakshmi mother passed away

உருக்கமான பதிவு : இந்நிலையில்,இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார். அதில், அம்மாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, நீ என்னை விட்டு பிரிந்து ஒரு வாரம் ஆகிறது பாப்பா. ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. நீங்கள் சந்தித்த அந்த ஐந்து வருட போராட்டமும் வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என்பதுதான் எனக்கு ஆறுதல்

இப்படி விட்டுவிட்டீர்களே : நீங்கள் எப்போதும் ஒரு சூப்பர் அம்மா, உண்மையில் சூப்பர் வுமன், ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை இல்லை, ஆனால் நீங்கள் அதை எல்லா வழிகளிலும் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் பேசுவதை, சாப்பிடுவதையும் கடைசியாக ஒருமுறை பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் நீங்கள் என்னை இப்படி விட்டுவிட்டீர்களே, எப்பொழுதும் என் பக்கத்தில் இருங்கள் அம்மா என்று உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.