ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் டாப் 2 டெலிகாம் நிறுவனங்கள். இரண்டு நிறுவனங்களும் குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்குகின்றன. திட்டங்களின் விலைக்காக இருவருக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது என்றுகூட சொல்லலாம். சில சந்தர்ப்பங்களில், திடீர் திட்டங்களை அறிவித்து ஏர்டெல் முன்னிலையை பெறும். அதற்கேற்ப ஜியோ ஒரு திட்டத்தை களமிறக்கும்.
அந்தவகையில், இப்போது ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் சலுகையில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறது. ஏர்டெல் ரூ.399க்கான நுழைவு நிலை போஸ்ட் பெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் கூடுதல் OTT நன்மைகள் இல்லை. OTT நன்மைகளை வழங்கும் ஏர்டெல்லின் பாக்கெட்டுக்கு ஏற்ற போஸ்ட்பெய்ட் திட்டத்தை நீங்கள் விரும்பினால், நீங்கள் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஏர்டெல் ரூ 499 போஸ்ட்பெய்ட் திட்டம்
பார்தி ஏர்டெல்லின் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில், நீங்கள் 75ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தில், நீங்கள் Amazon Prime-ன் தொகுப்பையும் பெறுவீர்கள். இருப்பினும், Amazon Prime ஆறு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும், ஒரு வருடத்திற்கு அல்ல. இதனுடன், ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் பெறுவீர்கள்.
இந்தத் திட்டத்தில் பயனர்கள் ஹேண்ட்செட் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் மற்றும் விங்க் மியூசிக் பிரீமியம் போன்ற கூடுதல் நன்மைகளையும் பெறுகிறார்கள். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை குடும்பத் திட்டமாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும், இந்தத் திட்டத்தில் கூடுதல் ஆட்-ஆன் இணைப்புகளைப் பயன்படுத்த விரும்பினால், ஒவ்வொரு ஆட்-ஆன் இணைப்புக்கும் ரூ.299 செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆட்-ஆன் இணைப்பிலும், நீங்கள் 30 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.