புவனேஸ்வர் ஒடிசாவில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கஞ்சா பயன்படுத்த தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி ஒடிசா மாநிலம் ஆரடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாபா அகண்டல்மணி சிவன் கோவிலில் கஞ்சா பயன்பாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என அனந்த பலியா அறக்கட்டளையின் தலைவரான பலியா பாபா, ஒடிசா மாநில கலால் துறைக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவர், ‘சிவன் கோவிலுக்கு மாநிலம் முழுவதும் இருந்து தினமும் […]