இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் பெரும் அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில் இனி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, உ.பி., அரியானா, சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இதனால் தமிழகத்திலும் மழை பெய்யும் என கூறப்படுகிறது.
இனிமேல் வெப்பநிலை குறைந்து மேகமூட்டத்துடன் காணப்படும். ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலைப் பகுதிகளில் அடுத்த 2- 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு இந்தியாவில் புயல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 2 நாள்களில் நாள்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான சூழல் சாதகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கேரளத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
newstm.in