ஜெனீவா:
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மனிதக்குலம் மீண்டு வரும் நிலையில், அடுத்து ஒரு பயங்கரமான ஆபத்து நம்மை நெருங்கவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
76-வது உலக சுகாதார மாநாடு ஜெனீவாவில் இன்று நடைபெற்றது. இதில் தலைமை வகித்து டெட்ரோஸ் அதானோம் பேசியதாவது:
ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று உலக சுகாதார அவசர நிலையில் (Global Health Emergency) இருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் மனிதக்குலத்துக்கான அச்சுறுத்தல் என்ற நிலையில் இருந்து அது நீக்கப்படவில்லை. இன்னும் கொரோனா முடிவடையவில்லை. அது இன்னும் கொடிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திரிபுகளாக எதிர்காலத்தில் உருவெடுக்கும். உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ் திரிபுகளாகவும் அவை மாறி ஒரு பெரிய அலையை உருவாக்கலாம்.
உலகிலேயே மிகக் கொடிய தற்காப்புக் கலையை கற்கும் இந்திய ராணுவ வீரர்கள்.. என்ன அது?
எனவே எந்தவிதமான அவசரநிலையையும் சமாளிக்கக்கூடிய வகையில் உலக நாடுகள் இருக்க வேண்டும். அடுத்த பெருந்தொற்று நம் கதவை தட்டும் போது அதை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஓரணியில் தயாராக இருக்க வேண்டும். இதற்கான மருத்துவ உள்கட்டமைப்புகள், உபகரணங்கள், தேவையான சுகாதார முன்களப் போராளிகள் ஆகியோரை நாம் தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும். 2030-க்குள் சுகாதாரம் தொடர்பான இலக்குகளை அடைய நாம் முடிவு செய்திருந்தோம். ஆனால், கொரோனா பெருந்தொற்று அதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. எனினும், அந்த இலக்குகளை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.
பெருந்தொற்று நம்மை நிலைக்குலைய செய்துவிட்டது உண்மைதான். அதே சமயத்தில், மேற்குறிப்பிட்ட சுகாதார இலக்குகளை ஏன் நாம் அவசரமாக அடைய வேண்டும் என்பதையும் நமக்கு கொரோனா தொற்றுதான் மீண்டும் நினைவூட்டி இருக்கிறது. இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறினார்.