கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை.. "யாரு சாமி இவன்"..

சென்னை:
கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படும் என்ற பீதி ஏற்பட்டுள்ள நிலையில், கோவிட் தடுப்பூசி ஏதும் போட்டுக் கொள்ளாத மணமகளே தனக்கு வேண்டும் என ஒருவர் கொடுத்த விளம்பரம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதை பார்த்த 90 கிட்ஸ் பலர், பெண் கிடைப்பதே சிரமம்.. இதில் இதுபோன்ற கண்டிஷன் எல்லாம் போட்டால் ‘வாய்ப்பில்ல ராஜா’ என கலாய்த்து வருகின்றனர்.

சமீபகாலமாக இளம் வயது மாரடைப்புகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 45 வயதில் மாரடைப்பு என்றாலே ஆச்சரியமாக இருந்த நிலையில், தற்போது சர்வசாதாரணமாக 25 வயதில் எல்லாமல் ஹார்ட் அட்டாக் வர தொடங்கிவிட்டது. திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகன் சாவு, கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம் என்ற செய்திகள் அன்றாட ஒன்றாக மாறிவிட்டன.

உடற்பயிற்சியின்மை, துரித உணவு என மருத்துவர்கள் இதற்கு ஏராளமான காரணங்களை கூறினாலும், கொரோனாவுக்கு பிறகே இந்த மாரடைப்புகள் அதிகரிப்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக, கொரோனா தடுப்பூசிகள் தான் இப்படி மாரடைப்பை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு பேச்சு உள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக பிரிட்டனை சேர்ந்த பிரபல இதயநோய் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, “கோவிஷீல்டு தடுப்பூசி இதயத்துக்கு செல்லும் ரத்தத்தை உறையச் செய்வதால் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகம்” என அண்மையில் கூறினார்.

இந்நிலையில் தான், எதற்கு இந்த வம்பு என நினைத்த இளைஞர் ஒருவர் தனக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தாத மணமகளே வேண்டும் என விளம்பரம் கொடுக்கும் நிலைக்கு சென்றுவிட்டார். அந்த விளம்பரத்தில், “கொங்கு வேளாள கவுண்டர் இனத்தைச் சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தைச் சேர்ந்த கொரோனா வேக்ஸின் போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை” எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு தினசரி நாளிதழில் இந்த விளம்பரத்தை பார்த்த ஒருவர், இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது இது வைரலாக பரவி வருகிறது.

மேலும், இந்த விளம்பரத்தை பார்த்த 90 கிட்ஸ்கள், இதை வைத்து பல மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். “தம்பி.. நாங்களும் ஒருகாலத்துல நிறைய கண்டிஷன் போட்டவங்கதான். அனுபவத்துல சொல்றேன் உனக்கு கல்யாணம் ஆகாது.. ” என பேட்டை திரைப்பட வசனத்தை வைத்து மீம்ஸ்கள் பறந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.