தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை!!

தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மாப்பிள்ளையை மணப்பெண் 20 கி.மீ ஓடிச் சென்று பிடித்துவந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அதான் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம்பெண்ணும்காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர். இதையடுத்து எளிமையாக கோவிலில் திருமணம் நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி, திருமண நாளன்று மணப்பெண் உட்பட அனைவரும் வந்திருந்தனர். ஆனால், மாப்பிள்ளை வரவில்லை. நீண்ட நேரமாகியும் மணமகன் வரவில்லை என்பதால், அவரை தேடி மணமகளே சென்றார்.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்னாள், மணமகனுக்கும் மணமகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்ட மாப்பிள்ளை, திருமணத்துக்கு வரமாட்டேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மாப்பிள்ளையை தேடி சென்ற மணப்பெண் 20 கி.மீ தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் மணமகனை கண்டுபிடித்தார். அங்கே பேருந்துக்காக காத்திருந்த அவரை, பிடித்து கையோடு மீண்டும் கோயிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டார்.

சிறிதாக வாக்குவாதம் ஏற்பட்டதால் திருமணத்துக்கு வரமாட்டேன் என்று காணாமல் போன மணமகனை பிடித்து இழுத்துவந்த மணமகளின் செயல் பேசுபொருளாக மாறியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.