புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
வருகின்ற மே 28 -ஆம் தேதி புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா். இந்த திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும், வி.டி.சாவா்க்கரின் பிறந்த தினமான மே 28-ஆம் தேதி அன்று திட்டமிட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவதாக எதிா்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமா்சித்து வருகின்றன.
மேலும், நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடிதான் திறக்க வேண்டும் என்று கூறி, இந்த திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.