மழையால் வீடு இடிந்து 3 வயது குழந்தை பலி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பசவனத்தொட்டி கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது.

அப்பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ், அவரது மனைவி, இரு பிள்ளைகள், அவரது பெற்றோர் என 6 பேர் வசித்து வருகின்றனர். மழை பெய்ததனால் இவர்களது வீடு இடியும் தருவாயில் இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை எதிர்பாராத நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை ரக்சித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.