முன்னாள் முதலமைச்சர் கவலைக்கிடம்!!

லோக்சபா முன்னாள் சபாநாயகரும், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான மனோகர் ஜோஷி (85) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூத்த அரசியல் தலைவரான மனோகர் ஜோஷி , மும்பை மேயராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தார். அவர் 1995 முதல் 1999 வரை முதல்வராகவும், பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை மக்களவை சபாநாயகராக இருந்துள்ளார்.

மகாராஷ்டிராவின் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் இவர்தான். சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர்.

சிவசேனா கட்சி மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜோஷிக்கு மூளையில் கட்டி உண்டானதன் காரணமாக அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

ஜோஷியின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி மற்றும் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.