ஸ்டாலின் பயணம்: அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றம்! யார் யாருக்கு எந்த மாவட்டம்?

தமிழக முதலமைச்சர்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார். நேற்று சிங்கப்பூர் சென்ற அவர் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களை அழைக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஜப்பான் சென்றும் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். ஒன்பது நாள்கள் பயணத்தை முடித்து மே 31ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.

முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்தவும், நலத்திட்டப் பணிகளை கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை நேற்று (மே 23) வெளியிடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை வருவாய் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு அமைச்சராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு எ.வ.வேலு பொறுப்பு அமைச்சராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்துக்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தா.மோ.அன்பரசன்,திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிவ.வீ.மெய்யநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்துக்கு எஸ்.எஸ்.சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.