ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டியில் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது.
அந்த நிலத்தை படிக்காசுவைத்தான்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். பன்னீர்செல்வத்தால் நிலங்களை பராமரிக்க முடியாததால், செயல் அலுவலரிடம் தெரிவித்துவிட்டு பழனிச்சாமி என்பவரிடம் குத்தகை உரிமையை வழங்கினார் எனச் சொல்லப்படுகிறது.
அதேநேரம், அதே நிலத்தை செயல் அலுவலர் ஜவகரிடம், படிக்காசு வைத்தான்பட்டியில் உள்ள நிலத்தை கிறிஸ்டோபர் என்பவருக்கு குத்தகைக்கு எடுத்தார். கிறிஸ்டோபர் நிலத்தை பராமரிக்க சென்ற போது, அதை ஏற்கனவே பயன்படுத்தி வந்த பழனிச்சாமி உடன் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கிறிஸ்டோபர், பழனிச்சாமி இருவரும் செயல் அலுவலர் ஜவஹரிடம் முறையிட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து பழனிசாமி, கோயில் செயல் அலுவலர் ஜவஹர் தன்னை கீழே தள்ளவிட்டதாகவும், தான் பராமரித்து வந்த நிலத்தை வேறு ஒருவருக்கு குத்தகைக்குவிட்டதாக கூறி, ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் செயல் அலுவலர் ஜவகர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.