மும்பை:வெறும் நான்கே மாதங்களில் 10 ஆயிரம் ‘டியாகோ இ.வி.,’ மின்சார கார்களை வினியோகித்து, புதிய மைல்கல்லை தொட்டுள்ளது ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம்.
கிட்டத்தட்ட 491 நகரங்களில் இயங்கி வரும் இந்த கார், இது வரை 1.12 கோடி கி.மீ., பயணித்துள்ளதாகவும், 16 லட்சம் கிராம் அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு, காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், 1,200 டியாகோ கார்கள் 3,000 கி.மீ.,ருக்கும் அதிகமாக பயணித்துள்ளதாகவும், 600 கார்கள், 4,000 கி.மீ.,ருக்கும் மேல் பயணம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காருக்கான சார்ஜிங், 90 சதவீதம் வீட்டில் செய்யப்படுவதால், எரிவாயு கார்களை ஒப்பிடும் போது, ஒட்டுமொத்தமாக 7 கோடி ரூபாய் வரை சேமிக்கப்பட்டுள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement