வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ,அடுத்த ஆண்டு ஜனவரியில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளதை அடுத்து, நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியை, உத்தர பிரதேச அரசு முழுவீச்சில் செய்து வருகிறது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், அடுத்த ஆண்டு ஜன., மாதம் மகர சங்கராந்தியின் போது திறக்கப்பட உள்ளது.
இதையடுத்து அயோத்தி நகரின் உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் பணியை மாநில அரசு முழுவீச்சில் செய்து வருகிறது.
இது குறித்து உ.பி., அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
அயோத்தி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராமர் கோவிலை பக்தர்கள் வந்தடையும் சாலைகளை விரிவாக்கம் செய்யவும், புதிய சாலைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
சஹாதத்கஞ்ச் முதல் நயா காட் வரையிலான 13 கி.மீ.,ரில் ராமர் பாதை, ராம் ஜானகி பாதை, பக்தி பாதை உள்ளிட்டவை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement