“ஏரியா சபை” நிகழ்ச்சி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1994-ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மூலம் அறிமுகமானது கிராம சபை. இதன் அதிகாரம் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு சற்றுக் குறைந்தது என்றாலும், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் சபை இதுவேயாகும்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் மக்களாட்சி மலர, ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பல வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஏரியா சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அரசியல் காட்சிகள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.
குடியரசு தினம், தொழிலாளர் நாள், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள், உள்ளாட்சி நாள் என கிராம சபை நடைபெறும் நாட்களில், நகர, மாநகர சபைகளையும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வாய்ப்பட்ட நிலையில், ஆண்டுகளுக்கு 4 முறை “ஏரியா சபை” நிகழ்ச்சி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாக்காளர் தினம் , அம்பேத்கர் பிறந்த தினம் , அண்ணா பிறந்த தினம், மனித உரிமை தினம் ஆகிய நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் “ஏரியா சபை” நிகழ்ச்சி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்,