சென்னை : நடிகை ஹன்சிகாவை டேட்டிங் அழைத்து தொல்லை கொடுத்த நடிகர் குறித்த தகவல் வெளியாகி சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது.
தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரியான ஹன்சிகாவிற்கு தொடக்கமே சிறப்பாக இருந்தது
இதைத் தொடர்ந்து தமிழில் தனுஷ், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி,கார்த்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
நடிகை ஹன்சிகா : எங்கேயும் எப்போதும் காதல் படத்தில் கொழுக்கு மொழுக்குனு இருந்த ஹன்சிகாவை பார்த்ததும் மொத்த தமிழ் ஆடியன்சும் அவுட்டாகிவிட்டனர். யாருடா இந்த பொண்ணு சும்மா கும்முனு இருங்காங்களே என்று ஹன்சிகாவின் அழகில் மயங்கி அவரை வர்ணிக்கத் தொடங்கினர். உதயநிதியுடன் ஒருகல் ஒருகண்ணாடி, தனுஷூடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம், சிம்புவுடன் வாலு உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
கடந்த ஆண்டு திருமணம் : கொழுக்கு மொழுக்குனு கும்முனு இருந்த ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஒல்லியானதால்,அவருக்கு படவாய்ப்பு பறிபோனது. இதையடுத்து, ஹன்சிகா தனது நெருங்கிய தோழர் சோஹேலை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமை வாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடந்தது.
டிஸ்னியில் : ஹன்சிகாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பெற்றிருந்ததால், அந்த வீடியோ வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பானது. அந்த வீடியோவில் ஹன்சிகா திருமண ஏற்பாடு குறித்தும், சோஹேலின் முதல் திருமணம் முறிந்து போனதற்கு ஹன்சிகா தான் காரணம் என பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தி என பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார்.
டேட்டிங் அழைத்த நடிகர் : இந்நிலையில், நடிகை ஹன்சிகா சினிமாவிற்கு வந்த புதிதில் பிரபல நடிகர் ஒருவர் அடிக்கடி டேட்டிங் வருமாறு அழைத்து தொல்லை கொடுத்ததாகவும், பின் அவருக்கு சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டினேன், அதன்பின் அவர் தன் பக்கமே வருவதில்லை என அவர் பேட்டி ஒன்றில் கூறியதாகவும் செய்தி வெளியானது. அந்த செய்தியைப் பார்த்து கொந்தளித்த ரசிகர்கள் யார் அந்த நடிகர் என்று தைரியமாக சொல்லுங்கள் என்றும், அந்த நடிகரை திட்டியும் பல கமெண்ட்டுகள் இணையத்தில் வலம் வந்தன.
டென்ஷனான ஹன்சிகா : இந்த செய்தியால் டென்ஷனான ஹன்சிகா, இப்படி ஒரு தகவலை நான் எந்த பேட்டியிலும் தெரிவித்தது இல்லை தயவு செய்து இதுபோன்ற ஆதாரமில்லாத செய்திளை பரப்புவதை நிறுத்துங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.