வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: ம.பி.,யில் இறந்த போன மனைவியில் ஆசையை நிறைவேற்ற, தனது வாழ்நாளில் முழுவதும் சம்பாதித்த பணத்தை செலவழித்து, பிரம்மாண்டமாக ராதாகிருஷ்ணா கோயிலை கட்டிய கணவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ம.பி., மாநிலம் பண்டல்கன்ட் பகுதியை சேர்ந்தவர் பிபி சன்சோரியா. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், 2016ம் ஆண்டு இறந்த போன மனைவியின் நீண்ட கால ஆசையை நிறைவேற்ற, சதர்பூர் பகுதியில் பிரம்மாண்டமான ‛ராதாகிருஷ்ணா’ கோயில் ஒன்றை கட்டி உள்ளார்.
இந்த கோயிலில் மார்பிள் கற்களில் கலையை செதுக்கி, அழகூட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் கடந்த 3 ஆண்டாக, ராஜஸ்தானை சேர்ந்த முஸ்லீம் கலைஞர்கள் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சன்சோரியா கூறியதாவது: ‛‛ ராதாகிருஷ்ணருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது எனது மனைவியின் நீண்ட கால ஆசை. 2016 ல் மனைவி இறந்த பிறகு, கோயில் கட்டியே தீருவது என்ற தீர்மானத்தை எடுத்தேன். ரூ.1.50 கோடியில் கோயில் கட்டி முடிக்க 6 ஆண்டுகள் மற்றும் 7 நாட்கள் ஆகி உள்ளது.
ராதா கிருஷ்ணா, அன்பின் அடையாளமாக திகழ்கிறார். அதனை பல நூற்றாண்டுகளாக மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். ராதா கிருஷ்ணாவுடன், ராதாவின் நண்பர்களாக இருந்த லலிதா மற்றும் விசாகாவுக்கும் சிலை அமைக்கப்படும். வரும் 29 ம் தேதி முதல் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்படும். திருமணத்திற்கு பிறகு, அனைத்தும் அன்பு தான் அடையாளம். சிறிய விஷயங்களுக்காக மனைவியையும், அன்பையும் இளைஞர்கள் ஒரு போதும் கைவிடக்கூடாது” என்றார்.
இறந்து போன மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், கோயில் கட்டிய சன்சாரியா வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாக, அப்பகுதி மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement