இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உலகளவில் பிரபல OTT தளமாக இருக்கும் Netflix நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஒரு Netflix கணக்கை ஒரு குடும்பத்தை சேராத நபர்கள் பயன்படுத்தினால் ஒருவருக்கு மாதம் 7.99 டாலர் தொகை செலுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது.
Password Sharing என்றால் என்ன?
அதாவது Netflix கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அவரது கணக்கின் Password மற்றும் User ID விவரத்தை வேறு ஒருவருக்கு பகிர்வதே Password Sharing ஆகும். இதனால் புதிய கணக்கு எதுவும் துவங்கப்படாமல் ஒரே கணக்கில் பலர் Netflix பார்க்கிறார்கள்.
இதனால் அந்த நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த புதிய திட்டம் மூலமாக இனி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் விவரங்களை முதலில் தெரிவிக்கவேண்டும். அதன் பிறகு அவர்கள் குடும்பத்தில் அல்லாதவர்களிடம் Netflix கணக்கு விவரங்களை தெரிவித்தால் உடனடியாக அவர்களின் கணக்கு முடக்கப்படும்.
BSNL 4G சேவை விரைவில் அறிமுகம்! டெலிகாம் சந்தையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்?
கூடுதல் பயனர்களை சேர்க்கவேண்டும் என்றால் ஒருவருக்கு மாதம் 7.99 டாலர் கட்டண தொகை செலுத்தி சேர்த்துக்கொள்ளலாம். இது இந்திய ரூபாய் மதிப்பில் 660 ரூபாய் ஆகும். இதுஇல்லாமல் Netflix நிறுவனம் அதன் பயனர்களை IP Mapping மூலமாக ஒரு கணக்கை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று கண்காணிக்கும். இதில் யாராவது தவறு செய்தால் அவர்களின் கணக்கு உடனடியாக முடக்கப்படும்.
இந்தியாவில் இன்னும் அமல்படுத்தவில்லை
இந்த திட்டம் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா மட்டும் இதில் சேர்க்கப்படடவில்லை. என்னதான் Netflix உலகளவில் மிகப்பெரிய OTT நிறுவனமாக இருந்தாலும் இன்னும் இந்திய OTT சந்தையில் அதனால் பெரிய அளவு தடம் பதிக்கமுடியவில்லை.
BGMI விளையாட்டை இன்னும் 3 மாதங்களில் மீண்டும் விளையாடலாம்!
இதற்கு முக்கிய காரணம் Disney+Hotstar, Amazon Prime, SonyLiv என பல OTT நிறுவனங்கள் குறைவான விலைக்கு OTT சேவை வழங்குகின்றன. அதனுடன் ஒப்பீடு செய்யும்போது Netflix சந்தா மிகவும் அதிகம். இதன் காரணமாகவே எப்படியாவது இந்திய OTT சந்தையில் வளர்ச்சி பெற Netflix நிறுவனம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவருகிறது. சமீபத்தில் அதன் சந்தா தொகையை இந்தியாவில் குறைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்