இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு தற்போது தன் 48 ஆவது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். மாநாடு என்ற படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பிய சிம்பு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் வெற்றிகளை குவித்து தன் மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக சிம்புவின் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் இப்படத்தை இயக்கவுள்ளார்.
முதலில் இக்கதையை தேசிங்கு பெரியசாமி ரஜினிக்காக தயார் செய்ததாகவும், சில காரணங்களால் ரஜினியால் இக்கதையில் நடிக்கமுடியாமல் போனதால் தற்போது சில மாறுதல்களை செய்து சிம்புவிடம் கூறி தேசிங்கு பெரியசாமி ஓகே செய்ததாகவும் தகவல் வந்துள்ளது.
Dhanush: தனுஷின் D50 படத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா ? எதிர்பார்ப்பை அதிகரித்த அறிவிப்புகள்..!
கமல் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் இப்படம் சிம்புவின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும் என்றும், அவரின் கரியரில் மிகமுக்கியமான படமாக இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகின்றது.
எனவே தன்னை வைத்து நூறு கோடி பட்ஜெட்டில் கமல் படமெடுக்க இருப்பதால் தன் சம்பளத்தை கணிசமாக சிம்பு குறைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 கோடிவரை சம்பளமாக கேட்டுவந்த சிம்பு இப்படத்திற்காக 25 கோடி மட்டுமே தான் சம்பளமாக வாங்கவுள்ளாராம். இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் மேலும் ஏறுமுகத்திற்கு செல்லும் என்றும், இதன் காரணமாக அவரின் சம்பளம் பலமடங்கு உயரும் என்பதாலே இப்படத்தில் தன் சம்பளத்தை சிம்பு குறைத்ததாக பேசப்பட்டு வருகின்றது.
ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது பற்றி தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவல் ஒன்று சிம்புவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதாவது இப்படத்தில் சிம்பு டூயல் ரோலில் நடிக்கின்றார் என செய்திகள் வருகின்றன.
ஹிஸ்டாரிக் கதையம்சம் கொண்ட பீரியட் படமாக இப்படம் உருவாக இருப்பதாகவும், இதில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் வந்த தகவலினால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் சிம்பு டூயல் ரோலில் நடிக்கின்றார் என்ற தகவலை கேட்டு குஷியில் இருக்கின்றனர். இது உண்மையாகும் பட்சத்தில் சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..