டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவிகளுக்கு சவால் விடுக்கும் மஹிந்திரா XUV100 கார் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்கள் பெற்ற இந்த மாடல் எலக்ட்ரிக் காராகவும் எதிர்காலத்தில் வரக்கூடும்.
குறிப்பாக துவக்கநிலை சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக உள்ள டாடா பஞ்ச் காருக்கு கடும் சவாலினை ஏற்படுத்த உள்ள எக்ஸ்டர் எஸ்யூவி உட்பட சிட்ரோன் C3, மேக்னைட் உள்ளிட்ட மாடல்களை எக்ஸ்யூவி 100 எதிர்கொள்ளலாம்.
Mahindra XUV100
கடந்த 2021 ஆம் ஆண்டே மஹிந்திரா XUV100 என்ற பெநரை இந்நிறுவனம் பதிவு செய்து வைத்துள்ளது. முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த KUV100 NXT மாடல் பெரிதான வரவேற்பினை பெறாத நிலையில் முற்றிலும் மாறுபட்ட புதிய பிளாட்ஃபாரத்தில் இந்த கார் வரவுள்ளது.
விற்பனையில் உள்ள XUV300 காரின் தோற்றத்தை உந்துதலாக கொண்டு வடிவமைக்கப்பட உள்ள XUV100 சோதனையில் உள்ள காரில் E20 எரிபொருள்’ என குறிப்பிடப்பட்டுள்ளதால் மேம்பட்ட 1.2L 3-சிலிண்டர் NA பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 82 bhp பவர் மற்றும் 115 Nm டார்க் பெற்று 5-வேக மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.
XUV100 கார் முற்றிலும் மூடப்பட்டு தற்காலிக ஹெட்லைட் மற்றும் டெயில் விளக்குகளை கொண்டு ரூஃப் ஸ்பாய்லர், பம்பரில் நம்பர் பிளேட் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி100 விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் ரூ.6.50 லட்சத்தில் எதிர்பார்க்கலாம்.