சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்தே அவர் அடுத்து என்ன செய்கிறார், செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
கிராமத்தில் இடம் வாங்கி பண்ணை வீடு ஒன்றை கட்டி வரும் மணிமேகலை தனது கணவருடன் இணைந்து அங்கே எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனை பார்த்து மணிமேகலையின் கணவரே சந்தோஷத்தில் திகைத்துப் போய் விட்டார்.
விஜே மணிமேகலை: சன் மியூசிக்கில் விஜேவாக இருந்த போதே பிரபலமானவர் மணிமேகலை. விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக பங்கேற்று ரசிகர்கள் மனங்களை கவர்ந்த மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வேறலெவல் பிரபலமானார்.
சினிமா நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்டவற்றையும் தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை பற்ற வைத்தது.

பண்ணை வீடு கட்டும் மணிமேகலை: கோவை பெண்ணான மணிமேகலைக்கு சென்னை வாழ்க்கையை விட கிராமத்து வாழ்க்கை தான் ரொம்பவே பிடித்திருக்கிறது.
இந்நிலையில், கிராமத்தில் பெரிதாக பண்ணை வீடு ஒன்றை மணிமேகலை கட்டி வருகிறார். தற்போது அந்த இடத்தில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை மணிமேகலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இரண்டு பில்லர்கள்: என்னுடைய பண்ணை வீட்டின் பில்லர் வலது புறத்திலும், என் வாழ்க்கையின் பில்லர் இடது புறத்திலும் என லெப்ட் சைடில் கணவர் ஹுசைன் நிற்பதை வைத்து போட்ட கேப்ஷனை பார்த்து அவரே ஆடிப் போய்விட்டார்.
மணிமேகலை பார்த்து வியந்த கணவர்: மணிமேகலை தனது வாழ்வின் பில்லர் என கணவரை குறிப்பிட்ட நிலையில், செம கேப்ஷன் சோட்டி.. எம்புட்டு பாசம் என் மேல என செல்லமாக கொஞ்சி உள்ளார்.
இவர்களது அலப்பறையையும் அந்த இடத்தையும் பார்த்த ரசிகர்கள், மணிமேகலை இவ்வளவு பெரிய பண்ணை வீட்டை கட்டி வருகிறாரா? என கண் வைத்து வருகின்றனர்.