புதுடில்லி,சர்வதேச யோகா தினத்தன்று, பஞ்சாயத்து அளவில் யோகா நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிக்கை அனுப்பி உள்ளது.
அறிக்கை
அடுத்த மாதம் 21ம் தேதியன்று சர்வதேச யோகா தினம்கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
அதன் விபரம்:
‘ஓர் உலகிற்கான யோகா’ என்ற கருப் பொருளில் இந்த ஆண்டுக் கான சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது.
முதியோர் இல்லம்
நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இந்த யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும்.
இதற்காக கிராம பஞ்சாயத்து அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பாலைவனம் முதல் காடுகள் வரை, ஆறுகள் முதல் கடல் வரை, கிராமம் முதல் தொழிற்சாலை வரை, அங்கன்வாடி முதல் முதியோர் இல்லங்கள் வரை யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் செய்ய வேண்டும். மாவட்ட தலைமையகத்தில், யோகா நிகழ்வுகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement